வணக்கம்! நீர்வேலி எனும் நீர்வளம், நிலவளம் கொண்ட ஊரின் தகவற்தளம் உங்களை வரவேற்கின்றது. உலகெல்லாம் பரந்து வாழும் நீர்வேலி மக்களை ஒன்றிணைப்பதே எங்களின் நோக்கமாகும்.

எமது ஊர்

எமது நீர்வேலிக் கிராமம் ஆனது இலங்கைத்தீவின் யாழ்பாண தீபகற்பத்தில் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. எமது ஊர் எல்லைகளாக கிழக்கே கைதடியும் வடக்கே சிறுப்பிட்டியும் மேற்கே அச்செழு, ஊரெழு ஆகியவையும் தெற்கே கோப்பாயும் உள்ளன. தாயகத்தில் பல விடயங்களுக்கு எமது ஊர் பிரபலமானதாகும். வாழைச்செய்கை, குடிசைக் கைத்தொழில், சவாரித்திடல், அத்தியார் இந்துக் கல்லூரி, கூட்டுறவுச்சங்கம், வழிபாட்டுத் தலங்கள் என்பன அவற்றுட் சிலவாகும். எமது மக்கள் பொருளாதார ஈட்டல்களை பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், வியாபாரம், அரசாங்க மற்றும் தனியார் துறை உத்தியோகங்கள் என்பவற்றின் மூலம் பெறுகின்றனர். கல்வி வளர்ச்சியில் அத்தியார் இந்துக் கல்லூரினது பங்கு பிரதானமாகும்.  மேலும் வாசிக்க »

த. பரராஜசிங்கம் J.P.

திரு. த. பரராஜசிங்கம் J. P. அவர்கள் பற்றி தரவுள்ளோம்.

அரசகேசரிப் பிள்ளையார் கோயில்

நீர்வேலிக் கிராமத்திதன் நடுநாயகமாகவிளங்கி அருள்பாலித்துக் கொண்டிருப்பதே அரசகேசரிப் பிள்ளையார் ஆலயமாகும். செம்மண் பிரதேசத்தில் அமைந்தால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் என்றும் வழங்குவதுண்டு.

யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்து வந்த தமிழ் அரசர்கள் நல்லூரில் இராசதானி அமைத்ததோடு நல்லூரில்லிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பலபாகங்களுக்கும் போக்குவரத்து செய்வதற்கான வீதிகளையும் அமைத்தனர்.

இந்தவகையில் நல்லூரிலிருந்து இருபாலை, கோப்பாய், நீர்வேலி ,சிறுப்பிட்டி, நவக்கிரி ஆகிய கிராமங்களுக்கூடாக அச்சுவேலிக்குச் செல்லும் வீதி அமைகின்றது. இதனாலேயே இந்த வீதி “இராச வீதி” என்று அழைக்கப்படுகின்றது.  மேலும் வாசிக்க »

எமது ஊர் சம்பந்தமான அமைப்புக்கள்

விளையாட்டுக்கழகங்கள்

  1. நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக்கழகம்

பாலர் பாடசாலைகளும் சனசமூக நிலையங்களும்

  1. ஸ்ரீ கணேசா ச.ச. நிலையம் (நீர்வேலி மத்தி)
  2. விநாயகர் ச.ச. நிலையம் (நீர்வேலி வடக்கு)
  3. காமாட்சியம்பாள் ச.ச. நிலையம் (குறுக்கு வீதி, நீர்வேலி வடக்கு)
  4.  மேலும் வாசிக்க »

நீர்வேலி கந்தசாமி கோவில்

நீர்வேலியின் தெற்குப் பகுதியில் அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் அமைந்திருகின்றது.  மேலும் வாசிக்க »

Syndicate content